தமிழக செய்திகள்

கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

சாயல்குடி அருகே கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தினத்தந்தி

சாயல்குடி, 

சாயல்குடி அருகே கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆர்வம்

நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களைவிட ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக குறைவு என்றே கூறப் படுகின்றது. நெல் விவசாயத்தைவிட இங்கு உள்ள விவசாயிகள் குறிப்பாக சாயல்குடி சுற்றிய பல ஊர்களில் விவசாயிகள் கம்பு, குதிரைவாலி, எள் உள்ளிட்ட பயிர்களை பயிரிடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கம்பு பயிர் பயிரிடும் சீசன் தொடங்கி உள்ளதை தொடர்ந்து சாயல்குடி அருகே கடுகு சந்தை, டி.வேப்பங்குளம், கடலாடி, உச்சிநத்தம், மலட்டாறு, எம்.கரிசல்குளம், கொண்டுநல்லாம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களிலும் விவசாயிகள் கம்பு பயிர்கள் பயிரிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மழை பெய்யாத நிலையிலும் கம்பு பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகின்றன. இதுகுறித்து கடுகுசந்தை கிராமத்தை சேர்ந்த விவசாயி கோட்டைசாமி கூறியதாவது:- கடலாடி, கடுகு சந்தை, டி.வேப்பங்குளம், மலட்டாறு, மேலச் செல்வனூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் கம்பு பயிர் விவசாயத்தில் விவசாயிகள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். கம்பு பயிர்கள் வளர்வதற்கு அதிக மழை, தண்ணீர் தேவையில்லை.

லேசான மழை

லேசான மழை பெய்தால் மட்டுமே போதும். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கம்பு பயிர் விதை விதைப்பு பணிகள் தொடங்கும். தை மாதம் அறுவடை செய்யப்படும். தற்போது கம்பு பயிர் சீசன் நடைபெற்று வருவதால் கம்பு பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகின்றன. தை மாதம் இந்த கம்பு பயிர்கள் அறுவடை செய்யப்படும்.

கடந்த ஆண்டும் கம்பு பயிர்கள் விளைச்சல் நன்றாக இருந்தது. இந்த ஆண்டும் விளைச்சல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இங்கு விளைச்சலாகும் கம்பு பயிர்கள் விளாத்திகுளம் அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு