தமிழக செய்திகள்

கடலாடி அருகே ஆடு திருடியதை தட்டிக்கேட்ட விவசாயி அடித்துக்கொலை - வாலிபர் கைது

ஆடு திருடியதை தட்டிக்கேட்ட விவசாயியை அடித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கண்ணன்புதுவன் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). விவசாயி. இவர் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவரது ஆடு ஒன்றை அதே கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி(27) திருடிச் சென்றுள்ளார். இதை அறிந்த சுப்பிரமணி, சத்தியமூர்த்தியிடம் ஆட்டை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி கம்பால் சுப்பிரமணியை தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி கடலாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கடலாடி இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு