தமிழக செய்திகள்

தேவகோட்டை அருகே கார் மோதி விவசாயி பலி

தேவகோட்டை அருகே கார் மோதி விவசாயி உயிரிழந்தார்.

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள வெட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 75). விவசாயி. திருவாடானை அருகே உள்ள பழையன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (67). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை முப்பையூரில் இருந்து தேவகோட்டை சாலையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றனர்.

அப்போது மதுரையில் இருந்து தொண்டி நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காளையார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தங்கவேல் பரிதாபமாக இறந்தார். சின்னத்தம்பி சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் கார் ஓட்டி வந்த மதுரை தமிழ் சங்க சாலை பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த சதீஷ்குமார் (46) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்