தமிழக செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டா.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள நிறைமதிகுடிகாட்டை சேர்ந்தவர் செல்வம்(வயது 47). விவசாயி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர், விவசாய மோட்டார் கொட்டகையில் வைத்திருந்த பூச்சிமருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. இதை அங்கு சென்றவர்கள் பார்த்து, அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு