தமிழக செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே உள்ள இடமருவத்தூரை சேர்ந்தவர் தாணுதாஸ் (வயது49), விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. மேலும் இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.

இந்தநிலையில் தாணுதாஸ் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாணுதாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி மதிகுமாரி இரணியல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...