தமிழக செய்திகள்

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கழுகுமலை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணசாமி மகன் பீட்டர்தேவதாஸ் (வயது 58). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக இருதய பிரச்சினை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், மனமுடைந்து காணப்பட்டாராம். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், நேற்று வீட்டில் விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இறந்து போன பீட்டர்தேவதாசுக்கு ராதா ருக்மணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...