தமிழக செய்திகள்

குடும்பத்தகராறு விஷம் குடித்து விவசாயி தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி காக்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 50). விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இவர்களுக்குள் தகராறு ஏற்படவே மனமுடைந்த நிலையில் ராதாகிருஷ்ணன் வயலுக்கு தெளிக்கும் பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார்.

அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை