தமிழக செய்திகள்

தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

திருத்துறைப்பூண்டி அருகே தனியார் பஸ்சில் இருந்துதவறி விழுந்து விவசாயி உயிழந்தார்.

தினத்தந்தி

திருத்துறைப்பூண்டி;

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சுராஜ்முகமது(வயது58). விவசாயியான இவர் கட்டி மேட்டிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்வதற்காக வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.கட்டி மேடு பகுதி வளைவில் பஸ் திரும்பிய போது பஸ்சின் பின்பக்க படியில் நின்று கொண்டிருந்த சுராஜ்முகமது மற்றும் கண்டக்டர் பிரசன்னா ஆகிய இருவரும் பஸ்சில் இருந்து வெளியே சென்று விழுந்தனர். இதில் சுராஜ் முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கண்டக்டா பிரசன்னாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பாசோதனை செய்த டாக்டர்கள் சுராஜ்முகமது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். கண்டக்டர் பிரசன்னா உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரவர் வருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து