தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). விவசாயியான இவர் தனது வீட்டிலிருந்து வயலுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது செல்லும் வழியில் அறுந்து கிடந்த மின் வயரை அவர் மிதித்ததில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து அவரது மனைவி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது