தமிழக செய்திகள்

கார் மோதி விவசாயி சாவு

தியாகதுருகம் அருகே கார் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உள்ள தென்னேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64), விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக நேற்று எலவனாசூர்கோட்டைக்கு சென்று விட்டு, மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திம்மலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடந்த போது, பின்னால் சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற கார், மொபட் மீது மோதி விட்டு சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்து அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, பலியான வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கோவை மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்த குணசேகரன் மகள் பிரியதர்ஷினி(29) மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்