தமிழக செய்திகள்

ரெயில் மோதி விவசாயி பலி

திருப்பத்தூர் அருகே தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி ரெயில் மோதி பலியானார். மாடும் உயிரிழந்தது.

தினத்தந்தி

தண்டவாளத்தில் சிக்கிய மாடு

திருப்பத்தூரை அடுத்த குனிச்சிமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 70). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் காக்கங்கரை- திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே குனிச்சிமோட்டூர் பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு மாட்டின் கால் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டது. இந்த நேரத்தில் அந்த வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது.

ரெயில் மோதி பலி

ரெயில் வருவதை பார்த்த நடராஜ் ஓடிச்சென்று மாட்டை தள்ளி உள்ளார். அதற்குள் அதிவேகமாக வந்த ரெயில் மோதியில் மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து. மேலும் நடராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சென்று நடராஜ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து