கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது முதல்-அமைச்சர் பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் தற்போது கொரோனா, புரெவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 12,110 கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல் அரசாணையையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்தவும், இந்த அறிவிப்பு உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூபாய் 12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நிதி, அரசால் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது