தமிழக செய்திகள்

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் :கடலூரில் 22-ந்தேதி நடக்கிறது

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூரில் 22-ந்தேதி நடக்கிறது.

தினத்தந்தி

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக்கூட்டம் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் கடலூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.

கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்க உள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரிய பதில் அளிக்கவும், மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உரிய அறிவுரை வழங்குவார். ஆகவே இந்த வாய்ப்பை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்