தமிழக செய்திகள்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; நாளை நடக்கிறது

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

தினத்தந்தி

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை