தமிழக செய்திகள்

விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்

வேதாரண்யத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்

தினத்தந்தி

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இனாம் இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். சங்கத்தின் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி வரவேற்றார். சக்தி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இனாம் இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் வெல்கேஸ், கருணாமூர்த்தி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நில உரிமையை மீட்க நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளை, பொதுமக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது