தமிழக செய்திகள்

கோவில்பட்டியில்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில்விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினா. கயத்தாறு தாலுகாவில் உள்ள கிராம பகுதிகளில் அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் காற்றாலைகளை அமைத்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தினர் கிராமத்தில் உள்ள ஓடை கரைகளை உடைத்து, நீர் நிலைகள், வண்டிப் பாதைகளை சேதப்படுத்தி விவசாயத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இப்பிரச்சினையில் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT