தமிழக செய்திகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது .

தினத்தந்தி

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அந்த வகையில் நேற்று வாரவிடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். தமிழகத்தில் நிலவிய மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மரக்கிளைகள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தன. இதனால் அந்த சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.

இருப்பினும் கொடைக்கானலில் நிலவிய சீதோஷ்ண சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். மேலும் தரை இறங்கிய மேகங்கள், மலையை வருடி சென்ற மேகக்கூட்டத்தை பார்த்து ரசித்தனர். அத்துடன் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள பூக்களையும், இயற்கை அழகினையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு