தமிழக செய்திகள்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மின் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் செல்வம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க பொறுப்பாளர் துரைராஜ், திருவள்ளுவர் விவசாய நலச்சங்க செயலாளர் மாரியப்பன், மாவட்ட துணைத் தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர் கொளஞ்சியப்பன், மணல் மாட்டு வண்டி சங்க தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி