தமிழக செய்திகள்

தரையில் பாலை கொட்டி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கலெக்டர் அலுவலகம் முன் தரையில் பாலை கொட்டி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தமிழக ஏரி ஆற்றுப்பாசன விவசாய சங்கத்தின் சார்பில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பால் விலையை உயர்த்த வேண்டும் என்று கோஷமிட்டனர் அப்போது பசும்பாலின் விலையை லிட்டருக்கு 45 ரூபாயாக உயர்த்த வேண்டும். கால்நடை தீவனங்களை 50 சதவீத மானியத்தில் ஆவின் மூலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு