தமிழக செய்திகள்

வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு பட்டியலில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான வேளாண் வர்த்தகத்தை மட்டுமே மாற்றியுள்ளோம். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

சந்தை, உட்கட்டமைப்பு வரி, இடைத்தரகர் வரி என சுமார் 8 சதவீத வரியை செலுத்துவதில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும். ஏபிஎம்சி சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்தால், 8.5 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இடைத்தரகர்களுக்கு பணம் வழங்க வேண்டும். வெளியே விற்பனை செய்தால், விவசாயிகள் வரி செலுத்த தேவையில்லை. விளைபொருட்களை பெற்றவுடன் ரசீதும் 3ல் 2 பங்கு தொகையும் உடனே வழங்க வேண்டும்.

வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை. உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் உள்ளது. வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சியே. ஆதாயம் கிடைக்கக் கூடிய வகையில் எங்கு வேண்டுமானாலும் விளை பொருட்களை விற்கலாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு