தமிழக செய்திகள்

புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் சாவு

புழல் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

புழல்,

செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோலையம்மன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(வயது 40). இவர். அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருடைய மகன் விஷ்ணு(10). இவர், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

தந்தை-மகன் இருவரும் நேற்று முன்தினம் மாலை பம்மதுகுளம் அருகே புழல் ஏரியில் குளிக்க சென்றனர். ஏரியில் குளித்தபோது மணிவண்ணன்-விஷ்ணு இருவரும் திடீரென சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல்அறிந்து வந்த செங்குன்றம்தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மூழ்கிய 2 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் உடல்களை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

நேற்று காலை புழல் ஏரியில் மீண்டும் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது நீரில் மூழ்கி பலியான மணிவண்ணன் மற்றும் அவருடைய மகன் விஷ்ணு ஆகியோரது உடல்களை அடுத்தடுத்து மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார், தந்தை-மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்