தமிழக செய்திகள்

மனநலம் பாதித்த மகன் மிதித்ததில் தந்தை உயிரிழப்பு.. உணவு கொடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்

மனநலம் பாதிக்கப்பட்ட மகன் திடீரென ஆவேசம் ஆகி தந்தையை தாக்குவது உண்டு.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பழைய சென்னல்குளத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 75). இவருடைய மகன் கணேசன் (45). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை குருசாமி பராமரித்து வந்தார்.

கணேசனை தனி அறையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு தினமும் உணவு கொடுப்பது குருசாமிதான். அந்த நேரத்தில் கணேசன் திடீரென ஆவேசம் ஆகி தந்தையை தாக்குவது உண்டு. மகனுக்கு மனநல பாதிப்பு இருந்ததால் அதை எல்லாம் அவர் பொறுத்துக்கொண்டு மகனை பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணேசனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக குருசாமி கதவைத்திறந்து உள்ளே சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக குருசாமியை கீழே தள்ளிவிட்டு கடித்து வைத்ததுடன், கடுமையாக மிதித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் குருசாமி பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்