தமிழக செய்திகள்

2 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை: தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் கடன் தொல்லை காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, அக்குழந்தைகளின் தந்தை தானும் தற்கொலைக்கு முயன்றார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை; தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் தேவிகுமார் (வயது 43). இவர் கடந்த 2020-ம் ஆண்டு கடன் தொல்லை காரணமாக தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பான வழக்கில் மேற்சொன்ன தேவிகுமாரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இரட்டை ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் (ADJ - I) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி தாண்டவம் நேற்று (2.11.2026) தேவிகுமாரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

SCROLL FOR NEXT