தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை - மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசின் நிதி போதுமானதாக இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் பேசுகையில், கொரோனா தொற்றால் பல சோதனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது. தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வரை தேவைப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு