கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

பெண் ‘பைக் டாக்சி’ டிரைவருக்கு பாலியல் தொல்லை: கல்லூரி மாணவர் கைது

கல்லூரி மாணவர் ஆபாசமாக பேசி பெண் டிரைவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், பைக் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் அமைந்தகரையை சேர்ந்த இம்ரான் (19 வயது) என்ற மாணவர் செல்போன் செயலி மூலம் கோயம்பேட்டில் இருந்து அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. செல்ல முன்பதிவு செய்துள்ளார். அவரை அந்த பெண் தனது மொபட்டில் ஏற்றிச்சென்றார்.

அரும்பாக்கம் செல்லும் வழியில் இம்ரான், செல்போனில் வேறு ஒருவருடன் பேசுவதுபோல் ஆபாசமாக பேசிக்கொண்டு பெண் டிரைவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்ரானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து