தமிழக செய்திகள்

பெண் தொழில் முனைவோர்களுக்கான சுயசக்தி விருதுகள் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிமுகம் செய்து வைத்தார்

பெண் தொழில் முனைவோர்களுக்கான சுயசக்தி விருதுகள் பெறுவதற்கு அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுகள் வழங்கும் விழா சென்னையில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

வீட்டில் இருந்தபடி தொழில் செய்யும், பகுதி நேரமாக பணிபுரியும் பெண் தொழில் முனைவோர்களுக்கான சுயசக்தி விருதுகள் வழங்கும் விழாவை பிராண்ட் அவதார் நிறுவனம் கடந்த ஆண்டு நடத்தியது. அதேபோல், சுயசக்தி விருது-2018 வழங்கும் விழா வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி இசை மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் சென்னையில் நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு இந்த விருதுகள் பெற 4 ஆயிரத்து 328 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு சுயசக்தி விருதுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் இந்த ஆண்டு சுயசக்தி விருதுகள் பெறுவதற்கு தகுதியுள்ள பெண் தொழில் முனைவோர்கள்

www.homepreneurawards.com, www.suyasakthi.com என்ற இணையதளத்தில் சென்று வருகிற 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு