தமிழக செய்திகள்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் சாட்சியம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் சாட்சியம் அளித்தனா.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது முன்னாள் செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மட்டும் நேரில் ஆஜரானார். சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அரசு தரப்பு சாட்சிகளான சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீஸ்காரர்கள் வினோத்குமார், சதீஷ், தடய அறிவியல் துறை விஜய், மாலா, விக்னேஷ் ஆகிய 6 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த சாட்சியங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி