தமிழக செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பெண் மாவோயிஸ்டு சரண்

போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பெண் மாவோயிஸ்டு சரண்.

தினத்தந்தி

வேலூர்,

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபா என்கிற சந்தியா (வயது 45). இவர் மாவோயிஸ்டு அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராவார். இவர் மீது 44 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்தார். பிரபாவின் இருப்பிடம் பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது. இந்த நிலையில் அவர் மாவோயிஸ்டு அமைப்பில் இருந்து முழுமையாக வெளியேறி அமைதியான வாழ்வை சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதற்காக சரண் அடைய விரும்புவதாக திருப்பத்தூர் கியூ பிரிவு போலீசாரிடம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்பு சரண் அடைந்தார். மாவோயிஸ்டு இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரான இவருடைய கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த மாதம் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது