தமிழக செய்திகள்

7 வயது மகளுடன் பெண் திடீர் மாயம்

சங்கராபுரம் அருகே 7 வயது மகளுடன் பெண் திடீர் மாயம்

கண்டாச்சிமங்கலம்

சங்கராபுரம் அருகே எகால் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விசாயியான இவருக்கு பேபிஷாலினி(வயது 24) என்ற மனைவியும், மகாலட்சுமி(7), கோகுலஅரசி(5) என்ற 2 மகள்களும், தட்சன்(3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேபி ஷாலினி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது பிள்ளைகளுடன் சங்கராபுரம் அருகே சித்தேரிப்பட்டு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார்.

சம்பவத்தன்று பேபிஷாலினி, தனது மூத்த மகள் மகாலட்சுமியுடன் டெய்லர் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவர்களை காணவில்லை. இது குறித்து பேபிஷாலினியின் தந்தை ராமச்சந்திரன் தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தண்டலை பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன தாய்-மகள் இருவரையும் தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...