தமிழக செய்திகள்

பெண் தற்கொலை முயற்சி; மத போதகருக்கு வலைவீச்சு

நெல்லையில் பெண் தற்கொலை முயற்சி தொடர்பாக மத போதகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 39). இவர் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் கிறிஸ்தவ சபை ஆரம்பித்து போதகராக உள்ளார். அவருடைய சபைக்கு சில ஆண்டுகளாக வந்த 40 வயது பெண் ஒருவரின் செல்போன் எண்ணை ஜெகன் வாங்கி அந்த பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும், ஆபாச தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்தப் பெண் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...