தமிழக செய்திகள்

மொபட் மீது பஸ் மோதி பெண் பலி

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே மொபட் மீது பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

பேளுக்குறிச்சி அருகே உள்ள மலைவேப்பன்குட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜீவா (வயது 40). இவர் அவரது மகள் கோமதியுடன் (27) மொபட்டில் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை நோக்கிச் சென்றுள்ளார். மொபட்டை கோமதி ஓட்டிச் சென்றார்.

அப்போது பொம்மைகுட்டை மேடு என்ற இடத்தில் சென்றபோது, மொபட்டின் மீது அரசு பஸ் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் காயம் அடைந்த கோமதி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து