சென்னை,
சென்னையை சேர்ந்த தனியார் கார் பராமரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவிற்காக மராட்டிய மாநிலம், பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சொகுசு கார்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அந்த கார்களில் வந்தவர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் அதிவேகத்தில் சென்று போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் பணியில் இருந்த போலீசார், நேப்பியர் பாலம் அருகே அந்த சொகுசு கார்களை மடக்கிப் பிடித்தனர். அதிக ஒலி எழுப்புதல், அதிவேகமாக செல்லுதல், முறையற்ற நம்பர் பிளேட்டுகள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.