தமிழக செய்திகள்

மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்தினால் அபராதம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை

சுகாதாரத்தை பேணும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

மெல்லும் புகையிலை பொருட்களின் விளைவாக எச்சில் துப்புவதாலும் குப்பைகள் போடுவதாலும் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றது. அந்த வகையில், மெல்லக்கூடிய புகையிலை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.

மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கண்டறிய முடியாததால் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் உடல் சோதனைகள் மேற்கொள்ளப்படும். கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை, விதி மீறல்களை தீவிரமாக கண்டறிந்து பாதுகாப்பு பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்