தமிழக செய்திகள்

ஏரியூர் அருகேபூட்டிய வீட்டில் திடீர் தீ; ரூ.7 லட்சம் எரிந்து சேதம்மின்கசிவு காரணமா? போலீசார் விசாரணை

தினத்தந்தி

ஏரியூர்:

ஏரியூர் அருகே பூட்டிய வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம், 2 பவுன் நகைகள் எரிந்து சேதம் அடைந்தன.

தீப்பிடித்தது

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே அஜ்ஜன அள்ளி ஊராட்சி சிகரலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி விஜயா (வயது 55). கோபால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய 2 மகன்கள் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் அவருடைய வீட்டில் இருந்து கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்க முயன்றனர். எனினும் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

மின்கசிவு

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விஜயா வீடு தீப்பிடித்து எரிந்ததை கண்டு கதறி அழுதார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் மகன்கள் சேமித்து வைத்திருந்த ரூ.7 லட்சம் மற்றும் 2 பவுன் நகை, வீட்டு பட்டா உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் தாழ்வாக செல்லும் வயர்களால் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்