தமிழக செய்திகள்

ஊத்தங்கரை அருகேகுடிசை தீப்பிடித்து நகை, பணம் எரிந்து நாசம்

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா மிட்டப்பள்ளி அருகே உள்ள கொட்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 42). விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 1-ந் தேதி குடும்பத்தினர் அனைவரும் விவசாய நிலத்துக்கு சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதில் மின்கசிவு ஏற்பட்டு அவரது வீட்டில் தீப்பிடித்தது. இதில் வீட்டில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.2 லட்சம், 15 நெல் மூட்டைகள், வீட்டு, நிலப்பத்திரங்கள் ஆகியவை எரிந்து நாசமானது. இதுதொடர்பாக பூபாலன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்