சென்னை,
சென்னை அண்ணா சாலை சாந்தி திரையரங்கம் அருகே உள்ள 5 மாடி கட்டடத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் 3-வது மாடியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், எழும்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து 4 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், ராட்சதக் கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. தற்போது தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ வேகமாக பரவுவதால், மேலும் சில தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட உள்ளன.