தமிழக செய்திகள்

சென்னையில் மின்சாதன பொருட்கள் கிடங்கில் தீ விபத்து - ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைப்பு

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் மின்சாதன பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட தீயை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையை அடுத்த மேடவாக்கம் விமலா நகரில் உள்ள மின்சாதன பொருட்கள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலாக மாறியது. இதனால் மக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவலறிந்து, துரைப்பாக்கம், வேளச்சேரி ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து