தமிழக செய்திகள்

அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.

தினத்தந்தி

திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு குழுவினர் திருச்சி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு கட்டிட வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காட்டினர். இதில் தீ விபத்து ஏற்பட்டால் தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும், தீ விபத்தில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் உள்ளே சிக்கிய பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் விரிவாக எடுத்து கூறினர். தீ விபத்து தடுப்பது மற்றும் மீட்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை டீன் நேரு தலைமை தாங்கினார். மருத்துவமனை சூப்பிரண்டு அருண்ராஜ், டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவமனை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை