தமிழக செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி

ராமநாதபுரம் அருகே போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

ராமநாதபுரம் அருகே போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்ததாக 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

ராமநாதபுரத்தை அடுத்துள்ள தேவிபட்டினம் அருகே உள்ளது சிங்கனேந்தல். இந்த ஊரை சேர்ந்தவர்கள் காளியப்பன் மகன் பூமிராஜன், சுப்பிரமணியன் மகன் பிரபாகரன், முருகேசன் மகன் ஹரிகரன். இவர்கள் அந்த பகுதியில் விவசாய வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்கள் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து திடீரென்று மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். தங்களை மணல் திருடியதாக தேவிபட்டினம் போலீசார் மற்றும் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அடிக்கடி பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தி வருவதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

விசாரணை

திடீரென 3 பேரும் தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் 3 பேரையும் மீட்டு கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 3 பேர் ஒரே நேரத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாகவும் அதற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்