கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

மூலப்பொருள் கலவை செய்யப்பட்டதை முழுமையாக சுத்தம் செய்யாமல் வைத்திருந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

தினத்தந்தி

சிவகாசி,

சிவகாசி காத்தநாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை நாரணாபுரத்தில் இயங்கி வந்தது.

இந்த நிலையில் அந்த பட்டாசு ஆலையில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலையில் இருந்த 3 அறைகள் முற்றிலுமாக தரைமட்டமானது.

முந்தைய தினம் பட்டாசு உற்பத்திக்கான மூலப்பொருள் கலவை செய்யப்பட்டதை முழுமையாக சுத்தம் செய்யாமல் மீதம் வைத்திருந்ததில் ரசாயன கலவை மாற்றம் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராத நேரத்தில் இந்த விபத்து நேர்ந்ததால் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரேவதி, சிவகாசி கிழக்கு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆலை உரிமையாளர் ராஜாராம், போர்மென் கருப்பசாமி, ஜெயராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து