தமிழக செய்திகள்

பட்டாசு கடையில் இருந்த சரவெடிகள் பறிமுதல்

பட்டாசு கடையில் இருந்த சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினத்தந்தி

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் விபத்துகள் நடந்து வந்த நிலையில் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்தநிலையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழு மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் திடீர் ஆய்வுகள் செய்து விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சிவகாசி விஸ்வநத்தம் பகுதியில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து தலைமையில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு சித்துராஜபுரத்தை சேர்ந்த காளிராஜன் என்பவரின் கடைக்கு அருகில் அனுமதிபெறாத கட்டிடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சரவெடிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்த அந்த சரவெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காளிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்