விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி என்ற இடத்தில் செயல் பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், பட்டாசு ஆலையில் பணியாற்றிய 2 தொழிலாளர்கள் பலியாகினர். பேன்சி ரக பட்டாசுக்கு வெடிமருந்து கலவை தயாரிக்கும் போது வேதிமாற்றம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த 2 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் இரண்டு அறைகளும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து குறித்த தகவல் அடைந்ததும் விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.