தமிழக செய்திகள்

தீத்தடுப்பு-மீட்பு குறித்து ஒத்திகை பயிற்சி

திருவாரூரில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்து விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியை கலெக்டர் சாருஸ்ரீ தாடங்கி வைத்தார்.

தினத்தந்தி

திருவாரூரில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு மற்றும் மீட்பு குறித்து விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சியை கலெக்டர் சாருஸ்ரீ தாடங்கி வைத்தார்.

தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பு மீட்புத்துறையின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தீத்தடுப்பு மற்றும் மீட்பு குறித்து பொதுமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி நடந்தது.

இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உடனிருந்தார்.

செயல்விளக்கம்

மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கட்டிட தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து ஒத்திகை பயிற்சி திருவாரூர் மாவட்ட ஊர்தி குழுவினர் கொண்டு கமாண்டோ பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது.இதேபோல் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படும் போது புகை மூட்டத்தில் சிக்கியவர்களை உடனடியாக உயிருடன் மீட்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

வெள்ள மீட்பு உபகரணங்கள்

சிறிய அளவிலான தீயணைப்பான்களை கையாளுவது எப்படி? என்பது குறித்தும், ஒவ்வொரு வீட்டிலும் சிறிய அளவிலான தீயணைப்பான்களை சமையல் அறையில் வைத்து பராமரிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆபத்தில் சிக்கியவர்களை 108 ஆம்புலன்ஸ் பணியாளரால் செயற்கை சுவாசம் வழங்குவது எவ்வாறு என்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அரசால் வழங்கப்பட்டுள்ள வெள்ள மீட்பு உபகரணங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர்கள் சீனிவாசன், கார்த்திகேயன் சுப்பையா மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை