தமிழக செய்திகள்

அரியலூரில் முதலுதவி பயிற்சி மையம்

அரியலூரில் முதலுதவி பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டத்தில் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் ஆலைகளில் பணிபுரிபவர்கள் முதலுதவி பயிற்சி பெறுவதற்கு தமிழ்நாடு திறன் வளர்ச்சி துற அரியலூர் ஏ.எஸ்.மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து பயிற்சி மைய தொடக்க விழா நடந்தது. இதில் திறன் வளர்ச்சி துற மேலாளர் வெங்கடாஜலம் வரவேற்று பேசினார். வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர் தலைமை தாங்கி, பயிற்சி மையத்தை திறந்து வைத்து மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஓட்டுனர் பயிற்சி உரிமம் பெறுவதற்கு இந்த மையத்தில் பயிற்சி பெற்று அதன் சான்றிதழை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறினார். இதில் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அகமது ரபி எதிர்பாராத விதமாக விபத்துகள் நடைபெற்று, அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி முதலுதவி வழங்குவது என்று கலந்து கொண்டவர்களுக்கு விளக்கி கூறினார். முடிவில் இயக்குனர் முகமது ரியாஸ் நன்றி கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு