கோப்புப் படம் 
தமிழக செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்..!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 13-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 50 இடங்களுக்கான வசதிகள் அனைத்தும், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் வரை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளில் 50 பேருக்கு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வைத்து பாடங்கள், செயல்முறை வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்