தமிழக செய்திகள்

வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 23ந்தேதி 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது முதல் அமைச்சர் ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ளார். அங்கு ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ அவர்களையும், செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோ அவர்களையும் மற்றும் வர்த்தக அமைப்புடன் உடன் முதல்-அமைச்சர் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தமிழகம் வரவுள்ள முதல் அமைச்சருக்கு சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை