தமிழக செய்திகள்

பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்....!

பிரதமர் மோடியை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தி.மு.க. கட்சி அலுவலகம் டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. அண்ணா - கலைஞர் அறிவாலயம் என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 2-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது.

தி.மு.க. அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றார். திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் அழைப்பு விடுக்கிறார்.

முன்னதாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?