சென்னை,
தமிழகத்தில் மழை நீர் வடிகால், அரசு திட்டப் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் பல மாவட்டங்களிலும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வரும் 30-ம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார்.