கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னையில் 28ம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு

முதற்கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 வரும் 23.04.2026 அன்று சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடத்தப்படவுள்ளது. 16 சட்டமன்றத் தொகுதிகளில் 978 இடங்களில் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள 19,594 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பானது வருகின்ற 28.03.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் கீழ்காணும் 16 மையங்களில் நடைபெறவுள்ளது.

  • 11. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - அரசு பாலிடெக்னிக் கல்லூரி, எண். 198/96, காமராஜர் காலனி தெரு, ராதாகிருஷ்ணன் நகர், தண்டையார்பேட்டை, சென்னை-81

  • 12. பெரம்பூர் - டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி எண். 45, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வியாசர்பாடி, சென்னை-39

  • 13. கொளத்தூர் - சென்னை உயர்நிலைப்பள்ளி எண். 38-42 பந்தர் கார்டன், சென்னை-11

  • 14. வில்லிவாக்கம் - ஐ.சி.எப். உயர்நிலைப்பள்ளி ஐசிஎப் காலனி, விடுதலை குருசாமி நகர் சென்னை-38

  • 15. திரு.வி.க.நகர் - சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி எண்.5, பள்ளிச்சாலை, பெரம்பூர், சென்னை-12

  • 16. எழும்பூர் - சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி எண்.3, ராட்லர் தெரு, சென்னை-112

  • 17. ராயபுரம் புனித பீட்டர் உயர்நிலைப்பள்ளி, மேற்கு மாதா சர்ச் சாலை, ராயபுரம், சென்னை-13

  • 18. துறைமுகம் - பாரதி அரசு கலைக்கல்லூரி, பிரகாசம் சாலை, பிராட்வே சென்னை-108

  • 19. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - என்.கே.டி. தேசிய பெண்கள் உயர்நிலைப்பள்ளி டாக்டர் பெசன்ட் சாலை, சேப்பாக்கம், சென்னை-5

  • 20. ஆயிரம் விளக்கு - சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பள்ளிச்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34

  • 21. அண்ணாநகர் டி ஜி வைஷ்ணவா கலைக் கல்லூரி, ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, எஸ்.பி.ஐ. ஆபிசர் காலனி, அரும்பாக்கம், சென்னை-106

  • 22. விருகம்பாக்கம் - மீனாட்சி பொறியியல் கல்லூரி, எண்.12, வேம்புலியம்மன் கோவில் தெரு, கே. கே.நகர் மேற்கு, விருகம்பாக்கம், சென்னை-78

  • 23. சைதாப்பேட்டை - அரசு ஆண்கள் கலைக்கல்லூரி நந்தனம், அண்ணா சாலை, சென்னை-35

  • 24. தியாகராய நகர் - அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி எண்.13, 54வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83

  • 25. மயிலாப்பூர் - ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எண்.162, ஆர்.கே.மட் சாலை, மந்தைவெள்ளி, சென்னை-28

  • 26. வேளச்சேரி - சென்னை உயர்நிலைப்பள்ளி, பாரதிதாசன் தெரு, திருவான்மியூர், சென்னை-41

மேற்படி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புக்கான ஆணைகள் நேரடியாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 28.03.2026 அன்று நடைபெறும் முதற்கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.