தமிழக செய்திகள்

முதல் சுற்று முடிவு: நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலை

நாங்குநேரி தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில் உள்ளார்.

தினத்தந்தி

நெல்லை,

நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு கடந்த 21-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மொத்தம் 66.35 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் தற்போது நாங்குநேரி தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் அ.தி.மு.க வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 6,300 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 4,700 வாக்குகள் பெற்று உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்